புதன், 12 நவம்பர், 2008

சமூக அறிவியலை கற்ப்போம் கற்பிப்போம்

நண்பர்களே!!

நாம் வாழும் இவ் உலகம் பல மக்கள்திரள் கொண்ட சமூகங்களின் தொகுப்பே , நம்மை பற்றியும்,சமூகங்களை பற்றியும்,உலகினை பற்றியும் நாம் ஒவொருவரும்வெவ்வேறு கருத்துருவங்களை கொண்டிருக்கிறோம். அது நம்முடைய சமூக சூழல்மற்றும் பெற்ற கல்வியை பொறுத்தே அமைகிறது. நமது சமூகம்உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன் ஆகிய முரண்களுடனேசெயல் பட்டு கொண்டிருக்கிறது. இவ்விடத்தில் காரல் மார்க்சின் கருத்தை நோக்குவோம். "நியாயமான ஓர் சமூக அமைப்பு ,ஆணை வருக்கும் சமநீதி வழங்கக்குடிய ஓர் சமூக அமைப்பு, பகுத்தறிவுடன் சிந்தித்து செயல் படும் ஓர் சமூக அமைப்பு இப் புவியில் அமையும் போது தான் மனிதகுலம் கற்காலத்திலிருந்து முன்னேறியதாக கருதமுடியும் என்றார் ". அத்தகைய முன்னேறிய சமூகத்தினை அமைக்க சிறந்த வழி கல்வி ஒன்றே !. ஒவொரு மனிதனையும் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன் படும் மனிதர்களாக உருவாக்குவதே உண்மையான கல்வியாகும். மேலும் மனிதன் தான் கற்ற அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவற்றை எல்லாம் பயன் படுத்தி தனக்கும் ,சமூகத்திலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வினை காணும் வகையில் உருவாக்குவதே உண்மையான கல்வியின் நோக்கமும் ஆகும் . அத்தகைய ஒரு கல்வியை தான் நாம் பெற்றிருகிறோமா? என்றால் எல்லை என்பதே பதிலாக கிடைக்கிறது .ஆம் அது போன்றோர் அறிவியல் வழி கல்வியை பெற்றிருந்தால் சமுகத்தில்நடக்கும் குற்றங்களையும், தற்கொலைகளையும் மாறும் மூட பழக்கங்களையும் முற்றிலும் குறைத்திருக்கலாம். அத்தகைய அறிவியல் வழி கல்வியை எல்லோர்க்கும் கிடைக்க செய்வதே சமூக அறிவியல் கல்வி இயக்கத்தின் நோக்கம் ஆகும் . நம்மை சுற்றி நிகழும் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளான சமூகங்கள் பற்றி,கலை இலக்கியம் பற்றி,பொருளாதாரம் பற்றி ,அரசியல் பற்றி ,சட்டம் பற்றி,மனிதநேயம் பற்றி,வரலாறு பற்றி ,அறிவியல் தொழில் நுட்பம் பற்றி ,மதம் பற்றி ,இயற்கை ,சுற்றுபுறம் பற்றி ,பெண்கள் விடுதலை பற்றி, உலக தத்துவங்கள் ஆகியன பற்றி அறிந்து கொள்ளவும் ,அவற்றை பற்றிய உண்மை நிலைகளை புரிந்து கொள்ளவும் ,அறிவியல் வழியே நிகழ்வுகளை அணுகவும் ,சமூக அக்கறையும் , மனித நேயமும் ,பகுத்தறிவு வழியே சிந்தித்து செயல் படும் மனிதர்களாக நம்மை வளர்த்து கொள்வதற்குமான ஓர் அறிவியல் வழி கல்வியை நாமும் பெற்று எல்லோர்க்கும் அளிக்கவேண்டும். அதனை நோக்கிய நெடும் பயணமே இச் சமூக அறிவியல் கல்வி இயக்கமாகும்.