இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். அவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்க வேண்டும்.
தரமான கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து மற்றவர்களை வழி நடத்த வேண்டும், தானும் நடக்க வேண்டும்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, மருத்துவம், போர்த்திறன், கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு வகைகளில் கற்றுக் கொள்பவருக்குள் நுழைகிற கருத்துருக்கள் அவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது.
ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால்கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார்.
இதற்குப் பின் வந்த காலங்களில்.....
வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில், ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள்.
கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பு ஏதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.
கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது.
சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது.
இன்றைய சூழலில்.....
அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன.
அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களைக் கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.
சுதந்திரம் அடைந்த பிறகு....
கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும், கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம்.
ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஒன்றும் அறியாத மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள்.
தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.
கடந்த இருபது ஆண்டுகளாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப் பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டிற்காகப் பேசப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. மாணவர்களின் வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும்.
பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15 விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.
கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை.
எனவே இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி, திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.
திங்கள், 11 மே, 2009
செவ்வாய், 14 ஏப்ரல், 2009
சட்டமேதை அம்பேத்கரின் 119 வது பிறந்த நாள்

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
பிறந்த இடம்: Mhow, மத்தியப் பிரதேசம்"
முக்கிய அமைப்புகள்:
Independent Labour Party, Scheduled Castes Federation, Republican Party of India
பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
சமூகப்பணிகள்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார்.
அம்போத்கர் கருத்துக்கள்
“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.
திங்கள், 23 மார்ச், 2009
சமூக அறிவியல்
சமூக அறிவியல் (Social sciences) என்பது உலகின் மனித நடத்தைகள் பற்றிய கல்வியாகும். இதனுள் பின்வருவன அடங்குகின்றன.
மானிடவியல் (Anthropology)
தொடர்பாடல் (Communication)
பொருளியல் (Economics)
கல்வி (Education)
புவியியல் (Geography)
வரலாறு (History)
மொழியியல் (Linguistics)
அரசியல் (Political science)
உளவியல் (Psycology)
சமூகவியல் (Sociology)
மானிடவியல் (Anthropology)
தொடர்பாடல் (Communication)
பொருளியல் (Economics)
கல்வி (Education)
புவியியல் (Geography)
வரலாறு (History)
மொழியியல் (Linguistics)
அரசியல் (Political science)
உளவியல் (Psycology)
சமூகவியல் (Sociology)
சனி, 21 மார்ச், 2009
ஞாயிறு, 8 மார்ச், 2009
மனித இனம்
மனித இனம் முதலில் தோன்றிய கடல் கொண்ட குமரிக் கண்டம்
'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று சொல்வார்கள். இப்படி வந்தவர்களை வாழ வைத்ததனால் தானோ என்னவோ தமிழன் தனது இனம், மொழி, கலாச்சார பெருமைகளை மறந்து விட்டான். அதைவிட தான் இழந்த பெருமைகளைப் பற்றி அறிய கூட ஆர்வம் காட்டாதவனாய் இருக்கிறான் என்றால் என்ன சொல்வது ?
தமிழனின் நாகரீகம்..........
தமிழனின் மறதியை பயன்படுத்திக் கொண்டு இந்திய வரலாற்றின் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன. இந்தியாவை பொறுத்தவரை சிந்து சமவெளி நாகரீகம் தான் மிகவும்பழமையானது என்கிறது வரலாறு. ஆனால் அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது.
ஆம்! குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் பரிணாம வளர்ச்சியில் குரங்கிற்கும், மனிதனுக்கும் இடைப்பட்டவன் என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது.
சிவா நடனம்......
குமரியில்கடல் கொண்ட இடம் 49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள். கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் மேற்கு எல்லை ஆஸ்திரேலியா. கிழக்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கு எல்லை அண்டார்டிகா.
ஒரு காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக இருந்திருக்கின்றன. நாளாவட்டத்தில் கடல் கொண்டு அவற்றை பிரித்திருக்கிறது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, மனிதயியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களுக்கும், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடிகளுக்கும் பல ஒற்றுமைகளை கூறுகிறார்கள்.
குறிப்பாக, ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி, கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.
பாட்டி / அவல்........
அதுபோல் ஆப்பிரிக்க பழங்குடியினருக்கும், தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்கள் குடும்பங்களில் வயதானவர்களை நாம் அழைப்பது போல் 'பாட்டி' என்று அழைக்கிறார்கள். அவல் என்ற பெயரை உபயோகிக்கிறார்கள். நமது மீனவர்கள் நாட்டு படகை தெப்பம், மிதப்பு என்று சொல்வது போல் ஆப்பிரிக்க பழங்குடியினரும் சொல்வது அந்த நாட்களில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்ததற்கான அடையாளம் என்றுஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தாய்மாமன் / அம்மி, உரல்........
எனவே ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும், உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாகஇருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்தி ருக்கிறது.
ஆடு மேய்ச்சான் பாறை......
ஆடு மேய்ச்சான் பாறை உள்ள இப்போதைய குமரி மாவட்டத்திலும் கூட பல உதாரணங்களை சொல்லலாம். குமரி மாவட்டத்தில் திருமணம் முடித்த தம்பதிகள் 'திரைகாணும் முன் தேரை காணனும்' என்பது மரபு. அதாவது கடலை பார்க்கும் முன்பு சுžந்திரம் தேரைபார்க்க வேண்டும். இதற்கு காரணம் தங்களது முன்னோர்களை கடல் கொண்டு விட்டதால் ஏற்பட்ட ஆத்திரம் என்பது வரலாறு.
குளச்சல் துறை முகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் கடலில் ஒரு சிறிய பாறை தென்படும். இதை 'ஆடு மேய்ச்சான் பாறை' என்று கூறுகிறார்கள். கடல் வழியாக எப்படி ஆடுகளை கொண்டு செல்ல முடியும்? அப்படியென்றால் பல வருடங்களுக்கு முன்பு அந்த இடம் தரையாக இருந்திருக்கும். மக்கள் ஆடுகளை மேய்த்திருப்பார்கள். கடல் கொண்டு விட்ட பின்னரும் இன்னும் ஆடு மேய்ச்சான் பாறை என்றே வழங்குகிறது.
பக்ரூளி ஆறு......
குமரிக் கண்டத்தில் பக்ரூளி ஆறு ஓடியதாக வரலாறு. குமரி மாவட்டத்தில் பரளி ஆறு ஓடுகிறது. பக்ரூளி தான் பரளியாக மருவி இருக்கிறது. அதுபோல் பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளமுதல் அணைக்கட்டில் பக்ரூளி ஆறு அணைக்கட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் ஓடியதன் நினைவாக பரளி ஆறு என்று பெயரிட்டிருக்கலாம். அல்லது இந்த ஆறே அங்கும் ஓடி இருக்கலாம். ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்.
காரணம், 1960-ம் ஆண்டு கடல் ஆராய்ச்சி செய்யும் போது குளச்சல் பகுதி கடலுக்கு அடியில் மலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். எனவே அது மேற்கு தொடர்ச்சி மலைதான். கடல் கொள்ளுவதற்கு முன் மலை ஆஸ்திரேலியா வரை பரவி இருந்தது என்று கூறப்படுகிறது.
குமரிகோடு.......
குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு, அதன்கோடு, ஆண்டுகோடு, இடைகோடு, மெக்கோடு, நெட்டன்கோடு, திருவிதாங்கோடு, பரகோடு, வெள்ளைக்கோடு, கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல கண்டங்களில் இருப்பது. குறிப்பாக, ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல்என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நாம் குமரி அம்மனை வணங்குகிறோம். 6-வது நூற்றாண்டில் கம்போடியாவில் குமரி அம்மனை வழிபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
சிலப்பதிகாரத்தில் குமரிக்கண்டம்.......
குமரிக் கண்டத்தை கடல் கொண்டதற்கான ஆதாரம் சிலப்பதிகாரத்தில் வருகிறது. 'பக்ரூளி ஆற்றுடன் பண்மலை அடுக்கத்து குமரி கோடும் கொடுங்கடல் கொள்ள' என்று தொல்காப்பியர் எழுதுகிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை தமிழனுக்கே உண்டு. உலகில் வேறு எந்த மொழிக்கும் சங்கம் இருந்ததாக வரலாறு இல்லை. முதல் தமிழ்ச் சங்கம் குமரிக் கண்டத்தில் தென் மதுரையில் இருந்ததாக வரலாறு. அதை கடல் கொள்ளவே கபாட புரத்தில் 2-ம் தமிழ்ச் சங்கம் இயங்கியது. இங்குதான் சிலப்பதிகார சம்பவங்கள் நடந்தன. இதை எழுதிய தொல்காப்பியர், அரங்கேற்ற உதவிய அதங்கோடு ஆசான், தற்போதைய குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
எனவேதான் கடல் கொண்டு பல ஓலை சுவடிகள் அழிந்தாலும் 2-ம் தமிழ்ச் சங்க கடைசி காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரம் நமக்கு கிடைத்தது.
ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுமா?
இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய்வு செய்தது.
இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன.கடலாய்வு செய்வதினால் பல அற்புதங்களை பூம்பூகார் நகரம் வெளிப்படுத்தியுள்ளது. அதை விட பல மடங்கு அற்புதங்கள் குமரிக் கண்டத்தில் உள்ளன. இதை கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்காக நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் எஸ். பத்மநாபன் 30 ஆண்டுகளாக கடலாய்வு செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள், கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.
நன்றி....
கதிரவன், 16 April 1998
'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று சொல்வார்கள். இப்படி வந்தவர்களை வாழ வைத்ததனால் தானோ என்னவோ தமிழன் தனது இனம், மொழி, கலாச்சார பெருமைகளை மறந்து விட்டான். அதைவிட தான் இழந்த பெருமைகளைப் பற்றி அறிய கூட ஆர்வம் காட்டாதவனாய் இருக்கிறான் என்றால் என்ன சொல்வது ?
தமிழனின் நாகரீகம்..........
தமிழனின் மறதியை பயன்படுத்திக் கொண்டு இந்திய வரலாற்றின் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன. இந்தியாவை பொறுத்தவரை சிந்து சமவெளி நாகரீகம் தான் மிகவும்பழமையானது என்கிறது வரலாறு. ஆனால் அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது.
ஆம்! குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் பரிணாம வளர்ச்சியில் குரங்கிற்கும், மனிதனுக்கும் இடைப்பட்டவன் என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது.
சிவா நடனம்......
குமரியில்கடல் கொண்ட இடம் 49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள். கடல் கொண்ட குமரிக் கண்டத்தின் மேற்கு எல்லை ஆஸ்திரேலியா. கிழக்கு எல்லை ஆப்பிரிக்கா. தெற்கு எல்லை அண்டார்டிகா.
ஒரு காலத்தில் இவை அனைத்தும் ஒன்றாக இருந்திருக்கின்றன. நாளாவட்டத்தில் கடல் கொண்டு அவற்றை பிரித்திருக்கிறது. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, மனிதயியல் ஆராய்ச்சியாளர்கள் தமிழர்களுக்கும், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடிகளுக்கும் பல ஒற்றுமைகளை கூறுகிறார்கள்.
குறிப்பாக, ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி, கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.
பாட்டி / அவல்........
அதுபோல் ஆப்பிரிக்க பழங்குடியினருக்கும், தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்கள் குடும்பங்களில் வயதானவர்களை நாம் அழைப்பது போல் 'பாட்டி' என்று அழைக்கிறார்கள். அவல் என்ற பெயரை உபயோகிக்கிறார்கள். நமது மீனவர்கள் நாட்டு படகை தெப்பம், மிதப்பு என்று சொல்வது போல் ஆப்பிரிக்க பழங்குடியினரும் சொல்வது அந்த நாட்களில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்ததற்கான அடையாளம் என்றுஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தாய்மாமன் / அம்மி, உரல்........
எனவே ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும், உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாகஇருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்தி ருக்கிறது.
ஆடு மேய்ச்சான் பாறை......
ஆடு மேய்ச்சான் பாறை உள்ள இப்போதைய குமரி மாவட்டத்திலும் கூட பல உதாரணங்களை சொல்லலாம். குமரி மாவட்டத்தில் திருமணம் முடித்த தம்பதிகள் 'திரைகாணும் முன் தேரை காணனும்' என்பது மரபு. அதாவது கடலை பார்க்கும் முன்பு சுžந்திரம் தேரைபார்க்க வேண்டும். இதற்கு காரணம் தங்களது முன்னோர்களை கடல் கொண்டு விட்டதால் ஏற்பட்ட ஆத்திரம் என்பது வரலாறு.
குளச்சல் துறை முகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் கடலில் ஒரு சிறிய பாறை தென்படும். இதை 'ஆடு மேய்ச்சான் பாறை' என்று கூறுகிறார்கள். கடல் வழியாக எப்படி ஆடுகளை கொண்டு செல்ல முடியும்? அப்படியென்றால் பல வருடங்களுக்கு முன்பு அந்த இடம் தரையாக இருந்திருக்கும். மக்கள் ஆடுகளை மேய்த்திருப்பார்கள். கடல் கொண்டு விட்ட பின்னரும் இன்னும் ஆடு மேய்ச்சான் பாறை என்றே வழங்குகிறது.
பக்ரூளி ஆறு......
குமரிக் கண்டத்தில் பக்ரூளி ஆறு ஓடியதாக வரலாறு. குமரி மாவட்டத்தில் பரளி ஆறு ஓடுகிறது. பக்ரூளி தான் பரளியாக மருவி இருக்கிறது. அதுபோல் பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளமுதல் அணைக்கட்டில் பக்ரூளி ஆறு அணைக்கட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் ஓடியதன் நினைவாக பரளி ஆறு என்று பெயரிட்டிருக்கலாம். அல்லது இந்த ஆறே அங்கும் ஓடி இருக்கலாம். ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்.
காரணம், 1960-ம் ஆண்டு கடல் ஆராய்ச்சி செய்யும் போது குளச்சல் பகுதி கடலுக்கு அடியில் மலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். எனவே அது மேற்கு தொடர்ச்சி மலைதான். கடல் கொள்ளுவதற்கு முன் மலை ஆஸ்திரேலியா வரை பரவி இருந்தது என்று கூறப்படுகிறது.
குமரிகோடு.......
குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு, அதன்கோடு, ஆண்டுகோடு, இடைகோடு, மெக்கோடு, நெட்டன்கோடு, திருவிதாங்கோடு, பரகோடு, வெள்ளைக்கோடு, கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல கண்டங்களில் இருப்பது. குறிப்பாக, ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல்என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நாம் குமரி அம்மனை வணங்குகிறோம். 6-வது நூற்றாண்டில் கம்போடியாவில் குமரி அம்மனை வழிபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
சிலப்பதிகாரத்தில் குமரிக்கண்டம்.......
குமரிக் கண்டத்தை கடல் கொண்டதற்கான ஆதாரம் சிலப்பதிகாரத்தில் வருகிறது. 'பக்ரூளி ஆற்றுடன் பண்மலை அடுக்கத்து குமரி கோடும் கொடுங்கடல் கொள்ள' என்று தொல்காப்பியர் எழுதுகிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை தமிழனுக்கே உண்டு. உலகில் வேறு எந்த மொழிக்கும் சங்கம் இருந்ததாக வரலாறு இல்லை. முதல் தமிழ்ச் சங்கம் குமரிக் கண்டத்தில் தென் மதுரையில் இருந்ததாக வரலாறு. அதை கடல் கொள்ளவே கபாட புரத்தில் 2-ம் தமிழ்ச் சங்கம் இயங்கியது. இங்குதான் சிலப்பதிகார சம்பவங்கள் நடந்தன. இதை எழுதிய தொல்காப்பியர், அரங்கேற்ற உதவிய அதங்கோடு ஆசான், தற்போதைய குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
எனவேதான் கடல் கொண்டு பல ஓலை சுவடிகள் அழிந்தாலும் 2-ம் தமிழ்ச் சங்க கடைசி காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரம் நமக்கு கிடைத்தது.
ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுமா?
இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கூட கடலாய்வு செய்தது.
இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன.கடலாய்வு செய்வதினால் பல அற்புதங்களை பூம்பூகார் நகரம் வெளிப்படுத்தியுள்ளது. அதை விட பல மடங்கு அற்புதங்கள் குமரிக் கண்டத்தில் உள்ளன. இதை கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்காக நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் எஸ். பத்மநாபன் 30 ஆண்டுகளாக கடலாய்வு செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள், கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்.
நன்றி....
கதிரவன், 16 April 1998
வெள்ளி, 6 மார்ச், 2009
சாக்ரடீசின் கடைசி நாள்கள்
இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்கில், ´ஆதென்ஸ்´ என்ற இடத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். இவரைப் பற்றி வரலாற்றில் ஒரு மதிப்பிடு உண்டு. "கேள்விக் கேட்டக் தெரிந்த வரலாற்று நாயகன்" என்பார்கள். சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு, அவை குறித்த தர்க்க விவாதங்கள் எதையும் செய்யாமல், அப்படியென்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட்டத்தில் சாக்ரடீஸ் வித்தியாசமாக இருந்தார். சமூக பழக்க வழக்கங்களை ஆராய்வதும், அரசு அமைப்பின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், எதிர் கேள்வியுமாக இருந்ததோடல்லாமல், நிறைய விவாதங்களுக்கென நேரம் ஒதுக்கி பேச ஆரம்பித்திருந்தார். இதென்ன பிரமாதம்! உட்கார்ந்து ஊர் கதை பேசிக்கொண்டு, இடக்கு மடக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பது ஓர் ஆச்சரியமான விஷயமா? என்று நமக்கு தோன்றலாம். இன்றைய மனிதனின் அறிவை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் சிந்தனையில் கேள்விகளுக்கோ, சிந்தனைகளுக்கோ இடமில்லை. அன்றைய மனிதனின் அறிவு அப்படி.நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, சம்பிரதாயம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். அவரின் பேச்சுக்களும், புதிருக்கான விடைகளையும், நயத்துடன் எடுத்துப் பேசும் போது பொது மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஆதென்ஸ் இளைஞர்களுக்கு சாக்ரடீஸ் ஹீரோவாக இருந்தார். அந்த கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது. கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக்கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்ததல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது. ஆதென்ஸ் அரசுக்கு இந்த விஷயம் எட்டியது. சாக்ரடீஸ் மீது குற்றம் சுமத்திய ´அனைட்டஸ்´ என்பவன் ஓர் அரசியல்வாதி. நகரத்தில் இருக்கும் சொந்த தெய்வங்களை வணங்காமலும், அவை குறித்து தவறான விமர்சனங்களை செய்ததாகவும், சமய ஆச்சாரங்களின் ஒழுக்கங்களை கடைப்பிடிக்கத் தவறியதாகவும் - இளைஞர்களுக்கு மாற்று கருத்துக்களை புகுத்தி திசை திருப்ப முயன்று சமூகத்தின் பழக்க வழக்கங்களை கெடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் ஐநூறு பேர்களுக்கும் மேல் நடுவர்களாக இருந்தார்கள். அக்காலத்தில் விசாரணைக்குரிய சட்டத்திட்டங்கள், சாட்சிகள், வாக்குமூலம், குறுக்கு விசாரணை போன்றவைகள் கிடையாது. அதிகாரங்கள் அரசியல்வாதிகளிடம் இருந்தது. அவர்கள் சொல்வதே சட்டநெறி. அப்படி இருக்கையில், அனைட்டஸ் அரசியல் செல்வாக்கு பெற்றவன். அவன் சாக்ரடீஸ் மீது பிராது கொடுத்திருக்கிறான். அந்த காலத்தில் சமயம் குறித்து தவறாக ஏதாவது ஓர் வார்த்தையை உபயோகித்தாலே தலையை வெட்டும் அளவுக்கு தண்டனை உண்டு. சாக்ரடீஸ் இளைஞர்களை திசை திருப்ப முற்பட்டார். சமயத்தை விமர்சித்தார் என்றால் சும்மா விட்டுவிடுவார்களா? அனைட்டஸ்க்கு சாக்ரடீஸ் மீது மிகுந்த பொறாமை இருந்தது. சாக்ரடீசின் பேச்சுத்திறமை, அறிவுத்திறமை அவர் பேசுவதை ´ஆ´வென வாய்யைப் பிளந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க ஒருபெருங் கூட்டமே இருந்தது. அரசியல்வாதிகளை குறித்து மக்களிடம் முன்பு இருந்த மரியாதையெல்லாம் சாக்ரடீசின் விவாதத்தால் தெளிவடைந்த மக்களிடம் மரியாதை இல்லாமல் போய்விட்டது. மக்களுக்குள்ளும் அரசியல்வாதிகளை குறித்து நக்கலாக பேசுவதும், ஏளனமாக பார்ப்பதுமாக மாறிப்போய்விட்டது. அரசின் செயல்பாடுகளில் இருந்த தில்லு முல்லுகளை குறித்தெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர். இவை நடந்த சில ஆண்டகளுக்கு பிறகுதான் இப்படியே விட்டால் கதை கந்தலாகிவிடும் என்று, அனைட்டஸ் அரசிடம் தவறான முறையில் போட்டுக் கொடுத்துவிட்டான். அரசுக்கு எதிராக மக்களையோ, அல்லது இளைஞர்களை சீரழிக்க வேண்டுமென்ற எண்ணமோ சாக்ரடீஸிடம் இல்லை. விவாதிப்பதை, சிந்திக்க வைப்பதை, அதன் மூலம் கேள்வி கேட்கும் அறிவை வளர்க்கவே சாக்ரடீஸ் முற்பட்டார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. சாக்ரடீஸிடம் அன்பு கொண்டிருந்த மக்களும், நண்பர்களும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு ஒடிப்போய்விடுங்கள் என்றனர். சாக்ரடீஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு குடிமகனை விசாரிக்கும் தகுதி அரசுக்கு உண்டு. அப்படியிருக்க அவ்விதிமுறைகளை மீறி ஊரைவிட்டு போகும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. அவ்வாறு செய்வதே கிரேக்க குடிமகனின் பெருங்குற்றமாகும் என்றார். என்ன நடந்தாலும் ஆதென்ஸ் நகரை விட்டு போகமாட்டேன் என்றார். விசாரணையில் பல தவறான பொய்யான பழிப்புகள் சாக்ரடீஸ் மீது சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. சில நடுவர்கள் அத்தீர்ப்புக்கு ஆதரவாக இல்லை. பலருக்கு பொய்யான குற்றச்சாட்டுக்கள் சாக்ரடீஸ் மீது சுமத்தப்பட்டது என்பது தெரியும். இருப்பினும், அனைட்டஸ் அரசியல் செல்வாக்கு அவர்களை மிரட்டியது. தண்டனையும் கொடுத்தாகிவிட்டது. இனி அரசு தீர்ப்பையும் மாற்ற முடியாது. சாக்ரடீஸிக்கு ஆதரவான நடுவர்களுக்கு கண்கள் கலங்கின. சாக்ரடீஸ் அவர்களை பார்த்து சொல்கிறார் :"இந்த தீர்ப்பு எனக்கு பெரிய தீங்கானது இல்லை. இடையீடு இல்லாதபடி ஒய்வு எடுப்பதே மரணம். எனவே, அதில் கெடுதல் இருக்க முடியாது. நல்ல மனிதனுக்கு வரும் மரணம் அவனை இன்னொரு சிறப்பான வாழ்வுக்கு அவனை கொண்டு செல்கிறது என்பது என் நம்பிக்கை. அம்மறு உலகத்தில் இருக்கும் நடுவர்கள் இத் தவறான தீர்ப்பை அழித்து நான் குற்றமற்றவன் என்பதை வெளிப்படுத்துவார்கள். என்னைப் போல் நியாயமற்ற முறையில் அரசால் தண்டிக்கப்பட்ட புகழ்பெற்ற அமரர்களையும் சந்திக்கப் போகிறேன். அவர்களுடன் நான் விவாதத்தில் ஈடுபடுவேன். அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்பேன். அங்கு கேள்வி மூலம் நிஜங்களை கண்டடைய தடையொன்றும் இருக்காது. உண்மையை கண்டடைய முற்படுபவனை அங்கு சிறையில் அடைத்து தண்டனை கொடுக்கவும் முடியாது. இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய ஆதென்ஸ் நடுவர் குழுவுக்கு நன்றி" என்கிறார். அவர் பேசி முடித்ததும், தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பை ஆதென்ஸ் அரசு பதினொருவர் அடங்கிய குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்படுகிறது. இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அப்போது, ஆதென்ஸ் நகரில் அப்பாலோ என்ற தெய்வத்தின் விழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்விழாவில் ´அப்பாலோ´ தெய்வம் ஃடெலோஸ் என்றும் ஊரில் இருக்கும் திருத்தலத்திற்கு காணிக்கையாக பல பொருட்களை படகின் மூலம் திருத்தலத்திற்கு கொண்டு போய் காணிக்கையை கொடுத்துவிட்டு, அப்படகு திரும்பி ஆதென்ஸ் நகரத்திற்கு வரும் வரை அந்நகரில் இருந்து யாரும் வெளி ஊர்களுக்கு செல்ல மாட்டார்கள். அரசும் தண்டனைகளோ எதுவும் இருக்காமல் அவ்விழா நாட்களில் தெய்வத்தின் புனிதத்தன்மையை பாதுகாத்து வருவது ஐதீகமாக இருந்தது. காணிக்கை கொண்டு செல்லும் அப்படகை கூட மிகப் புனிதமாக பாதுகாத்து ´புனிதப்படகு´ என்று வழங்கி வந்தனர் என்றால், ஆதென்ஸ் மக்களின் அவ்விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி இருப்பர் என்பதை உணரலாம். சாக்ரடீஸிக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, அப்பாலோ தெய்வத்தின் விழா நடந்துக் கொண்டிருக்கிறது. அப்பாலோவின் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு ஃடெலோஸ்க்கு சென்ற புனித படகு இன்னும் ஆதென்ஸிக்கு வரவில்லை. சாக்ரடீஸிக்கு தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. புனிதப்படகு சரியான காலப்படி ஆதென்ஸிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் காணவில்லை; என்னாயிற்று புனிதப்படகுக்கு என்ற கவலை ஒரு பக்கம். சரி சாக்ரடீஸை என்ன செய்வது? படகு வரும்வரை தற்காலிகமாக வெளியில் விடலாமா என்று யோசனை வந்தபோது சாக்ரடீஸிக்கு எதிராக இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்தனர். புனிதப்படகு வரும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாவிட்டாலும் சிறையில் அடைத்து வைத்திருந்து புனிதப்படகு வந்தபின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டது. சிறைக்குள் அடைக்கப்பட்ட சாக்ரடீஸை பார்க்க மனைவி ஸாந்திப்பே, பிள்ளைகள், சில முக்கிய நண்பர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சிறையில் சந்தித்த சில நண்பர்கள் சிறையில் இருந்து தப்பிச் செல்வதற்கு கட்டாயப்படுத்திய போதும் சாக்ரடீஸ் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இழிவான செயல் அவை என்றார். அவர் சொல்வதை கேட்காமல் அவரின் நண்பர்கள் தப்பிச் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவருக்கே தெரியாமல் செய்துவிட்டு, கடைசியில் வந்து சாக்ரடீஸை அழைத்துக் கொண்டு போக முற்பட்ட போது; முடியவே முடியாது என்று கண்டிப்போடு மறுத்துவிட்டார். "சிறைக் கைதி தப்பித்து ஓடுதல் சட்டத்திற்கு எதிரானவை. அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் என் சொந்த மனசாட்சே என்னை கொன்றுவிடும். என் மனச்சாட்சிக்கு எதிரான நடவடிக்கையை நான் எடுக்கமாட்டேன்" என்று தெளிவாக விளங்க வைத்த பின் தப்பி ஓடும் எண்ணத்தை நண்பர்கள் கைவிட்டனர். புனிதப்படகு ஒரு வாரம் வரையில் வானிலை கோளாறு காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்குள் வராமல் போய்விட்டது என்று குமுறிக் கொண்டு தரித்திரம் பிடித்த படகு ஆதென்ஸ் வந்து சேர்ந்தது. புனிதப் படகைக் கண்டதும் ஆதென்ஸ் மக்களுக்கு பதற்றமும், பயமும் பிடித்துக் கொண்டது. சாக்ரடீஸை நினைத்து அழுதனர். ஒரு நல்லவனுக்கு கிடைக்கப்போகும் கொடிய தண்டனையை நிறைவேற்றிவிடப் போகிறார்களே என்று ஆதென்ஸ் நகரத்தில் சோகம் பிடித்துக் கொண்டது. கடைசியாக மனைவி பிள்ளைகளுடன் சில மணித்துளிகள் பேச அனுமதிக்கப்பட்டனர். மாலை நேரம் பதினொருவர் குழுவின் தலைவன் சாக்ரடீஸை வந்து சந்திக்கிறார். கண்கள் கலங்குகிறது தலைவனுக்கு; சாக்ரடீஸை சோதிக்கிறார். மௌனமாக வெளிவே செல்கிறார்; அவரின் தலை அசைகளுக்கு அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது. ´ஹெம்லாக்´ என்னும் கொடிய நஞ்சு உள்ள கோப்பையை சாக்ரடீஸிக்கு கொடுக்கப்படுகிறது.கிரேக்கர்கள் தாங்கள் உண்ணும் உணவில் சில துளிகளை தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்வது பழக்கமாக இருந்தது. ஆனால், அன்று சாக்ரடீஸ் உண்பதற்கு முன் சில துளிகளை தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யவில்லை. நஞ்சுவின் அளவு குறைவிடக் கூடாதல்லவா?சாக்ரடீஸின் உதவுகள் மெல்ல எதையோ சொல்லி முணுமுணுத்தன. பிராத்தனையாக இருந்திருக்கலாம். சங்கடப்படாமல், தயங்காமல் கோப்பையில் இருந்த நஞ்சு முழுவதையும் குடித்துவிட்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். சிலர் ஓவென பெருஞ் சத்தத்துடன் கதறவே சாக்ரடீஸ் அவர்களை பொறுமையாக இருக்கும்படி அடக்கினார். சிறை அலுவலர் சாக்ரடீஸை பார்த்து சிறைக்குள் நடக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் கட்டளைக்கு மறுப்பு தெரிவிக்காமல் சாக்ரடீஸ் எழுந்து நடக்க ஆரம்பித்தார். (ரத்த ஓட்டத்தில் சீக்கிமாக நஞ்சு கலக்க வேண்டும் என்பதற்காக) கால்கள் குளிர ஆரம்பித்தன... நடையில் தள்ளாட்டம்... சாக்ரடீஸால் முடியவில்லை... சாக்ரடீஸ் படுத்துக் கொண்டார்...
அருகில் இருந்த வெளிளைப் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டார். முகம் கூட வெளில் தெரியவில்லை. சிறிது நேரம் ஒரே அமைதி. திடீரென சாக்ரடீஸ் முகத்தில் இருந்த வெள்ளைத் துணியை விலக்கினார். "கிரிட்டோ, அங்களெபியஸீக்கு நான் ஒரு சேவல் கொடுக்க வேண்டும். கடனை அடைக்க மறந்துவிடாதே"இதுதான் சாக்ரடீஸ் பேசிய கடைசி வார்த்தை. மீண்டும் வெள்ளை போர்வையால் முகத்தை மூடிக்கொண்டார். உடம்பில் சில துடிப்பு தெரிந்தது. சில மணிநேரத்திற்கு பின் நண்பர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. சாக்ரடீஸின் நண்பர் கிரீட்டோ போர்வையை நீக்கி பார்த்த போது கண்கள் திறந்தபடியும், வாய் திறந்தபடியும் சாக்ரடீஸின் உயிர் பிரிந்திருந்தது. சாக்ரடீஸின் இமையையும் வாயையும் மெல்ல மூடினார் கிரீட்டோ.
அருகில் இருந்த வெளிளைப் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டார். முகம் கூட வெளில் தெரியவில்லை. சிறிது நேரம் ஒரே அமைதி. திடீரென சாக்ரடீஸ் முகத்தில் இருந்த வெள்ளைத் துணியை விலக்கினார். "கிரிட்டோ, அங்களெபியஸீக்கு நான் ஒரு சேவல் கொடுக்க வேண்டும். கடனை அடைக்க மறந்துவிடாதே"இதுதான் சாக்ரடீஸ் பேசிய கடைசி வார்த்தை. மீண்டும் வெள்ளை போர்வையால் முகத்தை மூடிக்கொண்டார். உடம்பில் சில துடிப்பு தெரிந்தது. சில மணிநேரத்திற்கு பின் நண்பர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. சாக்ரடீஸின் நண்பர் கிரீட்டோ போர்வையை நீக்கி பார்த்த போது கண்கள் திறந்தபடியும், வாய் திறந்தபடியும் சாக்ரடீஸின் உயிர் பிரிந்திருந்தது. சாக்ரடீஸின் இமையையும் வாயையும் மெல்ல மூடினார் கிரீட்டோ.
வெள்ளி, 30 ஜனவரி, 2009
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்

இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே இன்று(29.1.09) காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.
இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் நீ ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமார் தெரிவித்தார்.
மேலும் பேசிய முத்துக்குமார் எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.
இன்று காலை முத்துக்குமார் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமார், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
26 வயதான முத்துக்குமார், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமாருடைய நண்பர்கள் தெரிவித்தனர்.
ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்திட்ட இந்த தமிழர், ஈழப்பிரச்சனை குறித்து கடைசியாக எழுதிய கடிதம் இதோ:
விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் .இந்த மாதம், இந்த வாரம், இதுவரைக்கும் என்னை எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே...உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்கு ஆதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்களும், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்னிலை வகித்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது.இந்தக் கூட்டணி கொள்கைக்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட. உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள்.பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமாம், வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாம்!
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்தும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்.இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் அதுதான், இந்திய உளவுத்துறை ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை.சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலிஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில், கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னைலி99
அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.
வெள்ளி, 23 ஜனவரி, 2009
நலமுடன் இருக்கிறீர்களா?உலகத் தமிழர்களே?
குண்டு விழாத வீடுகளில்,அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள்,இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?எனக்குத் தெரியும்,என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்கரைந்திருப்பீர்கள்......எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது,உங்கள் வீட்டு வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம்ஆடும்"மஸ்தானா,மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்குவந்திருக்கும்.அண்ணனும்,தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?அம்மா,அப்பாவின் மறைவுக்குப் பின்னால்,எனக்குத் தலை வாரிவிட்டு,பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை,நீண்டதேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும்,சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு,நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை,இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்....அதனால் தான் எழுதவில்லை.........ஒலிம்பிக்தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும்,என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும்,அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது,எனக்கு உங்கள்நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின் உதவியோடு,இலங்கை ராணுவத்திற்குநன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.ஒரு பக்கம்,இரங்கற்பா எழுதிக் கொண்டு,மறுபக்கம்,நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும்உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?இன்னொரு முறைஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள்,சாவின் மடியில்எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவது கிடைக்கும் அல்லவா?இன்னொரு தமிழகத்தின்மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது,குழந்தைகளையும்,கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒருவகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவதுகுறையட்டும்....... மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலானவெளிச்சத்தில்,தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,குழந்தைகள்இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள்,உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்று தான் அப்போது எழுதவில்லை,எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து,நிர்வாணமாக்கி,இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல்,எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் " சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள்,பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கியகேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள்,நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின்இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு,செப்பயான் குளத்தில் முங்கிஎழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு,வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து,அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.முகாமின்,தகரத் தடுப்புகளின் இடைவெளியில்தெரியும் பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும்,அம்மாவின்மடியில் இருந்து,எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு,பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்நிறுத்தி விடும்,அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்......அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு,ஆனால் நீங்கள்பீஸாக் கடைகளின்,வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள்,எழுதத் தோன்றவில்லை.....எனக்கு....அமைதியாய் விடியும் பொழுதும்,அழகாய்க் கூவும் குயிலும்,தோகை விரிக்கும் மயிலும்,காதல் பேசும்கண்களும்,தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம்வேண்டாம் அண்ணா,என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு,உங்கள் வீட்டில் கிழித்துஎறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,உலகத்தமிழர்களே........
ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும்,துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்இருக்கிறது.
வலி கலந்த நம்பிக்கைகளுடன்..................................
(கண்கள் நிறையக் கனவுகளோடும்,துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)












